好文集ChatGPT Plus¥119

IT இல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

என்ன தான்யா ஆச்சு இந்த ஐடி மக்களுக்கு. மாற்றம் என்ன புதிதா அவங்களுக்கு. எதற்கு இப்படி புலம்பி தள்ளுகிறார்கள் என்று நிறைய பேர் நினைக்க கூடும்.

ஐடி தொழிலின் சிறப்பே சாஃப்ட்வேர் எழுதுவது. அதை வைத்து தான் கிட்டதட்ட 30 வருடங்கள் உருட்டினோம். வயலும் வயல் சார்ந்த இடமும் மாதிரி சாஃப்ட்வேர் எழுதுவதும், எழுதுவதை ஒட்டின வேலைகளும் என்று இருந்தது, அடிச்சதே அண்ணனை தாண்டா மாதிரி AI வந்து சாஃப்ட்வேர் எழுத ஆரம்பித்தால்? எழுதினவனும் அவனை மேச்சவனும் என்ன செய்வான்? அதான் இத்தனை குழப்பம்.

ஃபிளாஷ்பேக் போவோம். 90 களில் மொத்த IT வேலைக்கு தெரிந்து இருக்க வேண்டியது மெயின்பிரேமும் நம்ம கோவாலும் தான். எம்பெட்டெட் உலகத்தில் C/C++, அப்புறம் அதன் இடத்தை ஜாவா பிடித்தது. 2000 ஒட்டி y2k ப்ராப்ளம் வந்த உடன் முடிச்சு விட்டீங்க போங்க என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு. இன்டர்நெட் boom. உள்ளங்கையில் உலகம். மிக பெரிய எழுச்சி. அப்புறம் தான் ஜாவா, VB, . நெட் டெவலப்பர், ஜாவா புல்லட் வச்சு இருந்தவன் எல்லாம் செலிப்ரிட்டி ஆனார்கள். லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகள் உருவாகின. IT இன் வசந்த காலம். திருவான்மியூர் தாண்டாத சென்னை, SRP டூல்ஸ், பெருங்குடி, துரைப்பாக்கம் என்று தன்னை நீட்டி கொண்டது. Y2K என்ற பெரிய சறுக்கலில் இருந்து, மன்மோகண்சிங் கொண்டு வந்த globalization உதவி செய்ய நான் வளர்கிறேனே மம்மி தான்.

சும்மா இருந்ததா இந்த டெக் உலகம்? 2005 வாக்கில் cloud computing என்று ஒன்றை கொண்டு வந்தது. அதற்குள் உலக பொருளாதாரம் பாதாளம் நோக்கி போய் வசந்த காலம் இலையுதிர் காலம் ஆச்சு. ஜாவா சுந்தரேசன் கூட cloud படிக்க வேண்டிய கட்டாயம். 2008 இல் திரும்ப ஒரு வாழ்வா சாவா போராட்டம். ஆனால் நடந்தது வேறு. 2010 மேல் அடுத்த பாய்ச்சல். வெப் கிளவுட் மொபைல் கம்ப்யூட்டிங் என்று. கால்குலேட்டர் மட்டும் யூஸ் பண்ண கம்பெனி எல்லாம் கிளவுட் கம்ப்யூட்டிங் வந்தாங்க. இது நம்ம காலம் கபிலா என்று கிளவுட் ஆர்க்கிடெக்ட எல்லாம் கிளவுட் 9 இல் தான் இருந்தார்கள். 2000 இல் வேலைக்கு சேர்ந்தவன் எல்லாம் ரெண்டாம் வீடு ரெண்டாம் கார் என்று ரெண்டாம் உலகதிற்கு சென்றார்கள். சென்னைக்கு மிக அருகில் திருப்போரூர் வந்தது.

அப்படியே விட்டார்களா இந்த சண்டாளர்கள்! IoT என்று ஒன்றை கொண்டு வந்தார்கள். அதுக்கு தனியா டெக்னாலஜி. மோனோலித் போய் microservice வந்தது டும் டும் டும். இன்டர்நெட் வளர்ச்சியால் அதிக அளவு data வர ஆரம்பித்தது. இப்போது python என்று ஒரு சைத்தான் வந்தது. 4 ஸ்பேஸ் தப்பா விட்டா error துப்பும் பிரோக்ராம்மிங்க் லாங்குவேஜ். ஆனால் ஆராய்ச்சி செய்பவர்கள், முதல் தலைமுறை programmers, மழைக்கு ஒதுங்கி புரோகிராமர் ஆனவன் எல்லாம் வந்தான். ஜாவா . நெட் libraries பெருக்க பல ஆண்டுகள் ஆச்சு. ஆனால் python மட்டும் இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா மாதிரி பெருத்தது. இதுவரைக்கும் எல்லாமே IT பொறுத்த வரை இனபெருக்க காலம். ஆனால் இண்டஸ்ட்ரி iot பெரிதாக பாதிக்கவில்லை எதிர்பார்த்த அளவு. ஏனென்றால் ஒரு 4 கம்பெனி மட்டும் அந்த tech ஐ monopolise ஆக்க முடியவில்லை. டெக் டெமாக்ரடிக் ஆனது. இது ஒரு சறுக்கல் துறைக்கு.

லேட்டா தான் வந்தார் விநாயக் மாதிரி அடுத்து கோவிட். recession வரும் என்று எதிர்பார்த்தவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் ஐடி மக்கள் தளராவில்லை. திருவான்மியூர் இல் இருந்து திருபோரூர் வரைக்கும் கட்டின ஆபீஸ் எதுவும் தேவை இல்ல. நான் கட்டின வீட்டில் கட்டின லுங்கி மட்டும் போதும் என்று வேலை பார்த்தார்கள். பொதுவான எல்லா அப்ளிகேஷன் கிளவுட் இல் இருந்ததால் வீட்டில் இருந்து வேலை செய்வது எளிதானது. MSFT AWS அடுத்த 50 தலைமுறைக்கு சம்பாதித்தார்கள். அது போக ரிமோட் எனேபிள் பண்ண ஏகபட்ட வசதிகள் என்று போச்சு. டிவிக்கு ரிமோட் மட்டும் பார்த்த மக்கள் வேலையே ரிமோட் என்று ஆகி விட்டது. எல்லாம் மங்களாகரமாக தெரிந்தாலும், ஐடி கக்கு வர வேண்டிய இன்வெஸ்ட்மெண்ட்ஸ் வேறு எங்கோ அடிப்படை தேவைகளுக்கு சென்றது. இதுவும் ஒரு சறுக்கல்.

மெயின்பிரேம் --> ஜாவா/. நெட் --> கிளவுட் கம்ப்யூட்டிங் --> மொபைல் apps என்ற தாவல் 2015 அப்புறம் ஐடி உலகத்தில் நடக்கவில்லை. இப்போ தான் கேம்பஸ் இன்டர்வியூ செலெக்ட் ஆனவர்கள் கூட ஜாயின் பண்ண தடைகள் ஆரம்பித்தது. இதற்கு நடுவில் AI AI என்று கொஞ்ச பேர் பஜனை செய்தார்கள்.

இந்த நேரத்தில் ஐடி இன் வேலை வாய்ப்பு என்றால் இந்த வகைகள் தான்.

  1. சப்போர்ட் சர்வீசஸ்

  2. ப்ராடக்ட் டெவலப்மெண்ட் (HW & SW)

  3. சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட்

இந்த மூன்று ஏரியாவும் பெரிதாக வளர வில்லை 2020 அப்புறம். நல் மேய்ப்பர் தான். அது போக நிறைய வேலைகளை காலி செய்தார்கள். கடிவாளம் போட்ட மாடு (குதிரை அல்ல) இண்டஸ்ட்ரி மெதுவாக நகர்ந்தது. CTO CoE குழுக்கள் கரீமி லேயர் ஆட்கள் நிரப்ப ஆரம்பித்தார்கள். ரொம்ப niche டெக்னாலஜி. யாரும் programming அடுத்த படி என்ன என்று எல்லாம் யோசிக்க வில்லை. IoT AI என்று ஒரு கலவையில் காலம் போனது. கம்பெனிகள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று இன்வெஸ்ட் செய்ய வில்லை. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று பழசை பட்டீங் டிங்கரிங் பார்த்து கொண்டால் போதும் என்று இருந்தார்கள். பாய்ச்சல் எல்லாம் கண்ணுக்கே தெரிய வில்லை. டெக்னாலஜி saturation ஆனது. இதனால் தான் தீடிர் தொழிலதிபர்கள், இன்ஸ்டா செலேபிரிட்டீஸ் உருவானார்கள். சம்பாதிக்கும் களம் மாறியது.

வச்சான் பாரு ஆப்பு என்று openAI வந்தது. GenAI என்று ஒரு டெக்னாலஜி. ஆராய்ச்சி அளவில் NLP என்று தன்னை சுருக்கி கொண்டு இருந்த ஒன்றை எடுத்து டாடி'ஸ் லிட்டில் பிரின்சஸ் மாதிரி வளர்த்து... ஒரு புது உயிரை தவிர எல்லாவற்றையும் உருவாக்க முடியும் என்று சொன்னார்கள். இதற்கு நடுவில் palantir என்று ஒரு கம்பனியும், anthropic என்று ஒருவனும் பேசு பொருள் ஆனார்கள். அபரிமிதமாக வளர்ந்தார்கள். நெல்லுக்கு பாய்வது கொஞ்சம் புல்லுக்கு பாயட்டும் என்று நம்ம ஆள் perkplexity இவர்களுடன் சேர்ந்து வளர்ந்தது. இந்த GenAI முதலில் அடித்தது கூகிள் சர்ச் ஐ தான். கேள்விகளை நீர் கேளும் பதிலை நான் சொல்கிறேன் என்று நக்கீரர் மாதிரி சவால் விட்டு பதில்களை சொன்னது. 2021 முதல் 2025 வரை டெக்னாலஜி ஆகவும் சீக்கிரம் வளர்ந்தது அண்ணாமலை படத்தில் ரஜினி வளருவது போல. ஆனால் விஷயம் என்ன வென்றால் இந்த கம்பனி களில் 200 300 ஆட்கள் மேல் வேலை செய்யவில்லை. குறைந்த ஆட்களை கொண்டு மிக பெரிய விஷயத்தை வெகு விரைவில் முடித்தனர். CEO முதல் செக்யூரிட்டி வரை insecure ஆனார்கள். ஏனென்றால் இவர்கள் செய்யும் எல்லா வேலையும் இப்போ AI செய்ய முடியும். DeepMInd என்ற ஒரு கூகிள் கம்பெனி AI வைத்து விளையாடி கொண்டிருந்த போது OpenAI, Anthropic மற்றும் Palantir பல இன சேர்க்கை மூலம் புரட்சியை உருவாக்கினார்கள்.

ஐடி இன் தாரக மந்திரமான சாஃப்ட்வேர் எழுதுவது இப்போது automate மற்றும் democratise செய்ய பட்டது. நீங்களும் எழுதலாம் சாஃப்ட்வேர் என்று ஆகி விட்டது இப்போ. முக்கியமான பேப்பர் automate செய்ய முடியும் என்றால் மற்ற வேலைகள்? கதம் கதம் தான். எஸ் வி சேகர் காமெடி ஒன்று - ஒரு வேலையை நாலு பேர் நாலு நாளில் பார்த்தால் எட்டு பேர் எவ்வளவு நாளில் பார்ப்பர் என்று. அதை கேட்டு வளர்ந்த 90s கிட் இன்று எட்டு பேர் செஞ்ச வேலையை எப்படி ஒரு AI சப்ஸ்கிருப்ஷன் 10 நிமிஷத்தில் பார்க்கும் என்று கலவரம் அடைகிறார்கள். அடி கொடுத்த கைப்பிளைக்கு இப்படி என்றால் அடி வாங்கினவன் உயிரோட இருப்பானா என்ற மாதிரி சாஃப்ட்வேர் எழுதினவன் நிலமை இப்படி என்றால். word, ppt, excel, வெறும் பேச்சு என்று பொழுதை ஒட்டினவன் நிலமை?

காதலுக்கு கண் இல்லை எனபது போல.. AI கு waterfall தெரியாது, agile தெரியாது. poker பாயிண்ட்ஸ் தெரியாது.. ஆனா என்ன வேணும் என்று நம்ம மொழியில் சொன்னால் 10 நிமிஷத்தில் சாஃப்ட்வேர் கொடுக்கும். ரசகுல்லா கு recipe எடுக்கற மாதிரி ராக்கெட் விட சாஃப்ட்வேர் கிடைக்கும் இப்போ.

அப்போ எல்லோரும் புவனா ஒரு கேள்விகுறி தான்.

-- தொடரும்.

全文完
查看原文